Enable Javscript for better performance
ஜூலை 25-இல் விவசாயிகள்  குறைதீர் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    தருமபுரி மாவட்ட ஆட்சியரகத்தில் வருகிற வெள்ளிக்கிழமை (ஜூலை 25) விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது.
     இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கே.விவேகானந்தன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
     மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டு குறைகள், கோரிக்கைகளை எடுத்துக் கூறலாம். கூட்டத்துக்கு முன்னதாக, வேளாண்மை, தோட்டக்கலை, மீன்வளம், பட்டுவளர்ச்சி, வேளாண் பொறியியல், வேளாண் அறிவியல் நிலையம், கால்நடை பராமரிப்பு உள்ளிட்ட துறைகள் சார்பில் கண்காட்சி நடைபெறவுள்ளது.
     இதை விவசாயிகள் பார்வையிட்டு புதிய தொழில் நுட்பங்களையும், அரசுத் துறைகளால் செயல்படுத்தப்படும் திட்டங்களையும் அறிந்து கொண்டு பயனடைய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai