Enable Javscript for better performance
தருமபுரி மாவட்டத்தில்  2016-இல் 5 தொகுதிகளிலும் அதிமுக  வெற்றி பெற உழைக்க வேண்டும்:  மாவட்டச் செயலர் முனுசாமி- Dinamani

சுடச்சுட

    

    தருமபுரி மாவட்டத்தில்  2016-இல் 5 தொகுதிகளிலும் அதிமுக  வெற்றி பெற உழைக்க வேண்டும்:  மாவட்டச் செயலர் முனுசாமி

    By  அரூர்,  |   Published on : 23rd July 2014 11:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    2016 சட்டப்பேரவைத் தேர்தலில் தருமபுரி மாவட்டத்தில் 5 தொகுதிகளிலும் அதிமுக வெற்றிப் பெறுவதற்கு தொண்டர்கள் கடுமையாக உழைக்க வேண்டும் என அந்தக் கட்சியின் மாவட்டச் செயலாளர் பூக்கடை முனுசாமி தெரிவித்தார்.
     தருமபுரி மாவட்ட அதிமுக செயலராகப் பொறுப்பேற்றுள்ள பூக்கடை முனுசாமிக்கு அந்தக் கட்சியினர் பாப்பிரெட்டிப்பட்டி, அரூர், மொரப்பூர் ஒன்றியங்களில் செவ்வாய்க்கிழமை வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து அவர் பேசியது:
     தருமபுரி மாவட்டச் செயலாளராக என்னை நியமித்த அதிமுக பொதுச் செயலாளர், முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், என்னை கட்சி நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் எந்த நேரத்திலும் சந்திக்கலாம், தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசலாம்.
     கடந்த மக்களவைத் தேர்தலில் ஜாதி அரசியல் காரணமாக அதிமுக வேட்பாளர் தோல்வியைத் தழுவினார். ஜாதி அரசியல், தீவிரவாதம், மதவாதத்தை ஒருபோதும் அதிமுக நிறுவனர் எம்.ஜி.ஆர் ஆதரித்தது கிடையாது. எனவே, அதிமுக தொண்டர்களுக்கு ஜாதிப் பிரச்னை தேவையில்லை.
     வரும் 2016-ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் தருமபுரி மாவட்டத்தில் 5 தொகுதியிலும் அதிமுக வெற்றிப் பெற வேண்டும். சட்டப்பேரவைத் தேர்தலுக்கு நீண்ட நாள்கள் இருப்பதாக நினைக்க வேண்டாம். இந்த மாதத்தில் இருந்தே தேர்தல் பணிகளை கட்சி நிர்வாகிகள் தொடங்க வேண்டும் என்றார்.
     இதில், ஒன்றியச் செயலாளர்கள் ஆர்.ஆர்.முருகன், ஜி.எஸ்.குப்புசாமி, ஒன்றியக் குழுத் தலைவர்கள் சி.தென்னரசு, பி.கே.முருகன், லலிதா குப்புசாமி, சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலையின் தலைவர் வளர்மதி முருகேசன், துணைத் தலைவர் வி.ஆர்.பார்த்தீபன், இயக்குநர் அச்சல்பாபு, பேரூராட்சித் தலைவர் காவேரி, மூத்த நிர்வாகிகள் அ.செ.ராசா, எம்.ஜி.வி பழனிமுருகன், கே.வி.ஆர் ராமஜெயம், பி.வசந்தி, ஜெயபிரகாசம், பொய்கை சம்பத்குமார், வழக்குரைஞர்கள் இளங்கோ, வி.ஆர்.வேடியப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai