Enable Javscript for better performance
நண்பர் வீட்டில் திருடிய  இளைஞர் உள்பட 2 பேர் கைது:  18 பவுன் தங்க நகைகள் மீட்பு- Dinamani

சுடச்சுட

    

    நண்பர் வீட்டில் திருடிய  இளைஞர் உள்பட 2 பேர் கைது:  18 பவுன் தங்க நகைகள் மீட்பு

    By  தருமபுரி,  |   Published on : 23rd July 2014 11:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தருமபுரி மாவட்டம், பாலக்கோட்டில் நண்பர் வீட்டில் இருந்து தங்க நகைகளைத் திருடிய சம்பவம் தொடர்பாக இளைஞர், அவரது மாமியார் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 18 பவுன் தங்க நகைகள் மீட்கப்பட்டன.
     பாலக்கோடு மந்திரி கவுண்டர் தெருவைச் சேர்ந்தவர் இந்திராணி. பேருந்து நிலையம் பகுதியில் கோழிக் கடை நடத்தி வருகிறார். இவரது பேரன் சிலம்பரசன் (27). கடந்த 20-ஆம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த நண்பர்கள் கவுதமன், சக்திவேல் ஆகியோரை பாட்டி வீட்டுக்கு அழைத்து வந்தாராம்.
     சிறிது நேரத்தில் கவுதமனும், சக்திவேலுவும் சென்ற பிறகு வீட்டின் பீரோவில் இருந்த 22 பவுன் தங்க நகைகள் மாயமானது தெரிய வந்தது.
     இதுகுறித்து பாலக்கோடு போலீஸில் சிலம்பரசன் அளித்த புகாரின் பேரில் போலீஸார் விசாரணை நடத்தினர். இதில், இந்திராணி வீட்டு பீரோவில் இருந்த நகைகளை இருவரும் சேர்ந்து திருடியது தெரிய வந்தது. இதுதொடர்பாக சக்திவேல், நகைகளை விற்க உறு துணையாக இருந்த அவரது மாமியார் நாகவேணி இருவரையும் போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்து, அவர்களிடமிருந்து 18 பவுன் தங்க நகைகளை மீட்டனர்.
     இதற்கிடையில், மனைவி மலருடன் தலைமறைவான கவுதமனை போலீஸார் தேடி வருகின்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai