Enable Javscript for better performance
மாணவர் சங்கச் செயலாளரைத் தாக்கிய  போலீஸார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    மாணவர் சங்கச் செயலாளரைத் தாக்கிய  போலீஸார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

    By  தருமபுரி,  |   Published on : 23rd July 2014 11:25 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மாணவர் சங்க மாவட்டச் செயலாளரைத் தாக்கிய காவல் ஆய்வாளர், உதவிக் காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தருமபுரி மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியது.
     இதுகுறித்து, அந்தக் கட்சியின் மாவட்டச் செயலாளர் எம்.மாரிமுத்து செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:
     தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே நல்லானூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் நூலகம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்ததரக் கோரி திங்கள்கிழமை மாணவர்கள் வகுப்புப் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
     போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களையும், இந்திய மாணவர்கள் சங்க மாவட்டச் செயலாளர் பி.கோவிந்தசாமி மீதும் பாப்பாரப்பட்டி காவல் ஆய்வாளர் ரத்தினகுமார், பென்னாகரம் உதவிக் காவல் ஆய்வாளர் ஜெய்சங்கர் ஆகியோர் கடுமையாகத் தாக்கினர்.
     ஜனநாயக ரீதியில் தங்களது போராட்டத்தை நடத்திய மாணவர்களை தரக்குறைவாகப் பேசி, தாக்குதலில் ஈடுபட்ட போலீஸார் நடவடிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டிக்கிறது. மேலும், மாணவர்களைத் தாக்கிய போலீஸார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai