Enable Javscript for better performance
லாரி மோதியதில்  பைக்கில் சென்ற விவசாயி சாவு- Dinamani

சுடச்சுட

    

    தருமபுரி மாவட்டம், பெரும்பாலை அருகே லாரி மோதியதில் இரு சக்கர வாகனத்தில் சென்ற விவசாயி திங்கள்கிழமை உயிரிழந்தார்.
     நல்லம்பள்ளி அருகே சாமிசெட்டிப்பட்டியைச் சேர்ந்தவர் க.கந்தசாமி (40). விவசாயியான இவர் திங்கள்கிழமை பெரும்பாலை அருகேயுள்ள மஞ்சநாயக்கனஅள்ளிக்கு இரு சக்கர வாகனத்தில் சென்று விட்டு ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தார். கொப்பலூர் என்னுமிடத்தில் வந்த போது பின்னால் வந்த லாரி மோதியதில் கந்தசாமி நிகழ்விடத்தில் உயிரிழந்தார்.
     சம்பவம் குறித்து பெரும்பாலை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai