Enable Javscript for better performance
வனப் பகுதியில் துப்பாக்கியுடன்  திரிந்த 4 பேர் கைது- Dinamani

சுடச்சுட

    

    வனப் பகுதியில் துப்பாக்கியுடன்  திரிந்த 4 பேர் கைது

    By  தருமபுரி,  |   Published on : 23rd July 2014 11:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வனப் பகுதியில் நாட்டுத் துப்பாக்கியுடன் நடமாடியதாக சகோதரர்கள் இருவர் உள்பட 4 பேர் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனர்.
     பென்னாகரம் வட்டம், கோடுபட்டி வனப் பகுதியில் மர்ம நபர்கள் துப்பாக்கியுடன் நடமாடுவதாக போலீஸாருக்கு செவ்வாய்க்கிழமை தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு சென்ற போலீஸார் அதே பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் மகன்கள் பரமசிவம் (39), அவரது தம்பி பசுவன் (30), பெரியபையன் மகன் கிருஷ்ணமூர்த்தி (32), சின்னசாமி மகன் தங்கவேல் (60) ஆகியோரை கைது செய்து அவர்களிடமிருந்து 4 நாட்டுத் துப்பாக்கிகளைப் பறிமுதல் செய்தனர்.
     இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த பென்னாகரம் போலீஸார், வனப் பகுதியில் நாட்டுத் துப்பாக்கியுடன் எதற்காக உலவினர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai