Enable Javscript for better performance
வாக்குச் சீட்டு முறையை அமல்படுத்தக் கோரி  தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பாமகவினர் ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    வாக்குச் சீட்டு முறையை அமல்படுத்தக் கோரி  தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பாமகவினர் ஆர்ப்பாட்டம்

    By  தருமபுரி/கிருஷ்ணகிரி/ஒசூர்,  |   Published on : 23rd July 2014 11:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தேர்தலில் மீண்டும் வாக்குச் சீட்டு முறையை அமல்படுத்தக் கோரி தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பாமக சார்பில் ஆர்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
     தருமபுரியில்...: மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் எம்.பி. ஆர்.செந்தில் தலைமை வகித்தார். மாநில துணைப் பொதுச்செயலாளர் அ.சரவணன் முன்னிலை வகித்தார்.
     இதில், இந்தியாவில் இனி வருகிற அனைத்துத் தேர்களிலும் வாக்குச் சீட்டு முறையை அமல்படுத்த வேண்டும். அண்மையில் நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலில் முறைகேடுகளில் ஈடுபட்ட அதிமுக மீது தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
     மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் முறையைக் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்திய முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
     பின்னர், இதே கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் கே.விவேகானந்தனிடம் மனு அளித்தனர்.
     இதில், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ல.வேலுச்சாமி, மாவட்ட ஊராட்சிக் குழு முன்னாள் தலைவர் வெங்கடேஸ்வரன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
     கிருஷ்ணகிரியில்....: வட்டச் சாலை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு அந்தக் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் கோ.மாதேஸ்வரன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் மின்னல் சிவா, மாநில துணைத் தலைவர் டி.ஏ.மேகநாதன், நகரச் செயலாளர் பாபுகாந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
     ஒசூரில்...: ஒசூர் நகராட்சி அலுவலகம் எதிரே நடைபெற்ற தொடர் முழக்கப் போராட்டத்துக்கு மேற்கு மாவட்டச் செயலாளர் அருண்ராஜன் தலைமை வகித்தார். மாநில துணைப் பொதுச் செயலாளர் தேவராஜன், முன்னாள் மாவட்டத் தலைவர் முனிராஜ், வழக்குரைஞர் பிரிவு மாவட்டச் செயலாளர் கதிரவன், நகரத் தலைவர் விஸ்வநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
     போச்சம்பள்ளியில்....: வட்டாட்சியர் அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு அந்தக் கட்சியின் மாவட்டச் செயலாளர் த.ஆறுமுகம் தலைமை வகித்தார். ஒன்றியச் செயலாளர் மு.தமிழ்சங்கர் வரவேற்றார். மாநிலச் செயற்குழு உறுப்பினர் தர்மலிங்கம், முன்னாள் வன்னியர் சங்க மாநில துணைத் தலைவர் சிவலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
     இதில், மாநிலச் செயற்குழு உறுப்பினர் டி.வி.கணேசன், முன்னாள் மாவட்டச் செயலாளர் கே.வி.முருகன், பி.ஜி.அண்ணாமலை, டி.வி.சேகர், எம்.மன்னன், பி.சி.சக்திவேல் எம்.எம்.மணி உள்பட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai