Enable Javscript for better performance
அனைத்துக் கிராமங்களுக்கும் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் விநியோகிக்க வலியுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    அனைத்துக் கிராமங்களுக்கும் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் விநியோகிக்க வலியுறுத்தல்

    By தருமபுரி,  |   Published on : 24th July 2014 03:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஒகேனக்கல் கூட்டுக் குடிநீரை அனைத்து கிராமங்களுக்கும் விநியோகிக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியது.

    அந்தச் சங்கத்தின் நல்லம்பள்ளி ஒன்றிய பேரவைக் கூட்டம், பி.அக்ரஹாரத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நல்லம்பள்ளி ஒன்றியச் செயலாளர் ஆர்.மாணிக்கம் தலைமை வகித்தார்.

    தியாகி ஏ.பஞ்சாட்சரம் கொடியேற்றி வைத்தார். மாவட்டச் செயலாளர் எஸ்.தேவராசன் பேசினார்.

    தருமபுரி மாவட்டத்தை வறட்சி பாதித்த மாவட்டமாக அறிவித்து நிவாரணம் அளிக்க வேண்டும்.

    அனைத்துக் கிராமங்களுக்கும் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீரை விநியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ஏரி, குளங்களை ஆழப்படுத்தி நீர்நிலைத் தேக்கங்களாக மாற்ற வேண்டும். புறம்போக்கு இடத்தில் வீடு கட்டியுள்ள அனைவருக்கும் வீட்டுமனைப் பட்டா அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

    கூட்டத்தில் ஒன்றியத் தலைவராக என்.முருகேசன், செயலாளராக ஆர்.மாணிக்கம், துணைத் தலைவர்களாக கே.கண்ணாயிரம், ஏ.பொன்மாரி, துணைச் செயலாளர்களாக ஜி.மாதையன், ஆர்.வேடியப்பன், பொருளாளராக எஸ்.பி.குட்டி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

    இதேபோல, தருமபுரியில் புதன்கிழமை நடைபெற்ற அந்தச் சங்கத்தின் வட்டாரப் பேரவைக் கூட்டத்தில், வட்டத் தலைவராக தீர்த்தகிரி, செயலாளராக ஆர்.ராமநாதன், துணைத் தலைவராக ஜி.மனோகரன், துணைச் செயலாளராக கே.பழனி, பொருளாளராக பெருமாள் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai