ஆட்டோ தொழிலாளி மரணம்:பொது விசாரணை நடத்த வலியுறுத்தல்
By தருமபுரி, | Published on : 24th July 2014 03:35 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
தருமபுரி மாவட்டம், தொப்பூரில் போலீஸார் விசாரணைக்கு பின்னர் ஆட்டோ தொழிலாளி உயிரிழந்தது குறித்து பொது விசாரணை நடத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து, அந்தக் கட்சியின் மாவட்டச் செயலாளர் எம்.மாரிமுத்து புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:
தருமபுரி மாவட்டம், தொப்பூரில் கல்லூரி மாணவி ஒருவரும், அந்தப் பகுதியை சேர்ந்த கல்லூரிப் பேருந்து ஓட்டுநரும் காதலித்து வந்து நிலையில் இருவரும் வெளியோருக்கு சென்று விட்டனர்.
இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீஸார், கல்லூரி மாணவியை அழைத்துச் சென்றவரின் நண்பர்களான தொப்பூரைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சந்தானம், கார்த்திக், மாதேஸ், மணி ஆகிய நால்வரை அழைத்துச் சென்று விசாரித்துள்ளனர்.
விசாரணையின் போது, அவர்களை போலீஸார் துன்புறுத்தி அச்சுறுத்தியுள்ளனர்.
இதனால், போலீஸார் அச்சுறுத்தலுக்கு பயந்து ஆட்டோ தொழிலாயான சந்தானம் திடீரென தற்கொலை செய்து கொண்டார்.
எனவே, சந்தானத்தின் இறப்பு குறித்து உண்மை அறிய, பொது விசாரணை நடத்த வேண்டும். மேலும், அவரது குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.