Enable Javscript for better performance
இளநிலை உதவியாளர் பணிக்கு நாளை கலந்தாய்வு- Dinamani

சுடச்சுட

    

    தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் இளநிலை உதவியாளர் பணிக்கு நடைபெற்ற தேர்வில் தேர்ச்சி பெற்ற தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கான கலந்தாய்வு வெள்ளிக்கிழமை (ஜூலை 25) நடைபெற உள்ளது.

    இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

    தருமபுரி மாவட்டத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு பள்ளிக் கல்வித் துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இளநிலை உதவியாளர் பணிக்கான கலந்தாய்வு வருகிற வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கும், சொந்த மாவட்டங்களில் காலிப் பணியிடம் இல்லாமல், வேறு மாவட்டங்களில் பணிபுரிய விருப்பம் உள்ளவர்களுக்கு வருகிற சனிக்கிழமை (ஜூலை 26) காலை 9 மணிக்கும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகக் கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.

    கலந்தாய்வில் பங்கேற்போர், அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் அளிக்கப்பட்ட துறை ஒதுக்கீட்டு ஆணை, அசல் கல்வி, ஜாதி சான்று, இதர ஆவணங்களுடன் கலந்து கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai