Enable Javscript for better performance
உடல்கல்வி ஆசிரியர்கள் பேரணி:கலை ஆசிரியர்கள் பங்கேற்க முடிவு- Dinamani

சுடச்சுட

    

    உடல்கல்வி ஆசிரியர்கள் பேரணி:கலை ஆசிரியர்கள் பங்கேற்க முடிவு

    By தருமபுரி,  |   Published on : 24th July 2014 03:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோரிக்கைகளை வலியுறுத்தி கோட்டை நோக்கி உடல்கல்வி ஆசிரியர்கள் சங்கம் நடத்தவுள்ள பேரணியில் தமிழ்நாடு கலை ஆசிரியர்கள் நல சங்கத்தினர் பங்கேற்க உள்ளனர்.

    இதுகுறித்து தமிழ்நாடு கலை ஆசிரியர்கள் நல சங்க மாநிலத் தலைவர் எஸ்.ஏ.ராஜ்குமார் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:

    பள்ளி கல்வித் துறை மானியக் கோரிக்கையில் பகுதி நேர சிறப்பாசிரியர்கள் பணி நிரந்தரம் அல்லது தொகுப்பூதியம் உயர்த்தி அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதுதொடர்பான அறிவிப்பு இடம் பெறவில்லை.

    கடந்த 2012-13-ஆம் ஆண்டு அரசு அறிவித்த சிறப்பாசிரியர் பணி இடங்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்ற பிறகும், இதுவரையில் நிரந்தர சிறப்பாசிரியர் பணியிடம் குறித்து ஆசிரியர் தேர்வு ஆணையத்தில் எந்த தகவலும் இல்லை.

    மாநில வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஓவியம், தையல், இசை ஆசிரியர் பணியிடங்களுக்கு காத்திருப்போர் பட்டியலில் 17,500 பேருக்கு மேல் உள்ளதாகத் தெரிகிறது. இந்தப் பணியிடங்கள் நிறுத்தி வைக்கப்படுவதால் காத்திருப்போர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆகஸ்ட் மாதம் 5-ஆம் தேதி கோட்டை நோக்கி உடல்கல்வி ஆசிரியர் சங்கம் பேரணி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    கலை ஆசிரியர்களும் பாதிக்கப்பட்டுள்ளதால் மாநிலம் தழுவியப் பேரணியில் பங்கேற்க உள்ளோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai