கார் மோதியதில் பெண் சாவு
By தருமபுரி | Published on : 24th July 2014 03:37 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
பாலக்கோடு அருகே நடந்து சென்ற பெண் மீது அந்த வழியாக வந்த கார் மோதியதில் அவர் உயிரிழந்தார்.
பாலக்கோடு அருகேயுள்ள கூலிகானூரைச் சேர்ந்தவர் முனியப்பன். இவரது மனைவி மல்லிகா (30). தொழிலாளி. இவர் செவ்வாய்க்கிழமை இரவு வேலைக்குச் சென்று விட்டு கூலிகானூர் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி வீட்டுக்கு நடந்து சென்றார்.
அப்போது, அந்த வழியாக வந்த கார் மோதியதில் பலத்த காயமடைந்த அவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
சம்பவம்குறித்து பஞ்சப்பள்ளி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.