Enable Javscript for better performance
சுமை தூக்கும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    கூலி உயர்வு கோரி தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழகக் கிடங்கில் பணியாற்றும் சுமை தூக்கும் தொழிலாளர்கள் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழகக் கிடங்கு முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சுமை தூக்கும் பணியாளர்கள் சங்கத்தின் மாநிலச் செயலாளர் த.கோவிந்தராஜ் தலைமை வகித்தார். மாவட்டப் பொறுப்பாளர் மணி முன்னிலை வகித்தார்.

    ஆர்ப்பாட்டத்தில், அரசு நிர்ணயித்த சுமையை லாரிகள் ஏற்றி வர வேண்டும். இறக்குக் கூலி டன்னுக்கு ரூ.20 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கிடங்கில் பணியாற்றும் 36 தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai