Enable Javscript for better performance
தருமபுரியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வேண்டும்- Dinamani

சுடச்சுட

    

    தருமபுரியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வேண்டும்

    By தருமபுரி,  |   Published on : 24th July 2014 03:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தமிழகத்தில் பொருளாதார வளர்ச்சியில் பின்தங்கியுள்ள தருமபுரி மாவட்டத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மாநில அரசு நிலம் ஒதுக்கி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பாமக எம்பி அன்புமணி ராமதாஸ் கேட்டுக் கொண்டார்.

    இதுதொடர்பாக தமிழக முதல்வருக்கு அவர் அனுப்பியுள்ள கோரிக்கை மனு: மத்திய அரசின் 2014-15ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அனைத்து மாநிலங்களிலும் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    மத்திய சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த காலத்தில் மத்திய அரசு நிதியிலிருந்து மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு ரூ.150 கோடி, சேலத்தில் எய்ம்ஸ் போன்ற மருத்துவமனை அமைப்பதற்காக ரூ.120 கோடி ஒதுக்கப்பட்டது.

    மத்திய அரசின் நிதி ஒதுக்கீட்டில் கட்டப்பட்டிருந்தாலும் மாநில அரசால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. ஆனால், தற்போது அறிவிக்கப்பட்டிருக்கும் எய்ம்ஸ் போன்ற மருத்துவமனை மத்திய அரசின் நிதியில் நிர்வகிக்கப்படும். எனவே, ஏழை மக்களுக்கு பயன்படும் சிறப்பான மருத்துவமனையாக அமையவிருக்கிறது.

    இந்தியாவில் எய்ம்ஸ் போன்ற மருத்துவமனைகள் பின்தங்கிய மாநிலங்களில் 6 மருத்துவமனைகள் தொடங்க என்னால் திட்டமிடப்பட்டு அதற்கான பூர்வாங்கப் பணிகள் தொடங்கப்பட்டன. தற்போது மத்திய அரசு இந்தத் திட்டத்தை விரிவாக்கி ஒவ்வொரு மாநிலத்திலும் எய்ம்ஸ் போன்ற மருத்துவ நிறுவனங்கள் தொடங்குவதாக அறிவித்திருப்பதால் பொருளாதார வளர்ச்சியில் 28ஆவது இடத்தில் உள்ள தருமபுரி மாவட்டத்தில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தருமபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழில்பேட்டை அமைப்பதற்காக கண்டறியப்பட்டுள்ள 863 ஏக்கர் நிலத்தில் 150 ஏக்கரை ஒதுக்கி உடனடியாக மருத்துவமனை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai