Enable Javscript for better performance
\\\"மக்கள் தொகைப் பெருக்கம் குறித்த விழிப்புணர்வு அவசியம்\\\'- Dinamani

சுடச்சுட

    

    "மக்கள் தொகைப் பெருக்கம் குறித்த விழிப்புணர்வு அவசியம்'

    By அரூர்,  |   Published on : 24th July 2014 03:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பள்ளி, கல்லூரி மாணவர்கள் இடையே மக்கள் தொகைப் பெருக்கம் குறித்த விழிப்புணர்வு அவசியம் என, தருமபுரி மாவட்ட மருத்துவம், ஊரக நலப் பணிகள் இணை இயக்குநர் வி.குணசுந்தரி தெரிவித்தார்.

    உலக மக்கள் தொகை தினத்தையொட்டி, அரூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் விழிப்புணர்வு கருத்தரங்கம் தலைமை மருத்துவ அலுவலர் கு.நெடுமாறன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

    இதில், இணை இயக்குநர் வி.குணசுந்தரி பேசியது:

    உலக மக்கள் தொகையில் இந்தியா 2-ஆவது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் தருமபுரி மாவட்டம் மக்கள் தொகை விகிதத்தில் முதலிடத்தில் உள்ளது. அதாவது பெண் சிசுக்கொலை, இளம் வயது திருமணம், தனிநபர் கழிப்பிடம், பெண் கல்வி உள்ளிட்டவைகளில் தருமபுரி மாவட்டம் போதிய விழிப்புணர்வு இல்லாமல் உள்ளது. மக்கள் தொகைப் பெருக்கத்தால் கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்புகள் பெற முடியாமல் போகும். எனவே, பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் மக்கள் தொகைப் பெருக்கத்தால் ஏற்படும் தீமைகளை நன்கு தெரிந்து கொள்ள வேண்டும். மக்கள் தொகையினால் ஏற்படும் பிரச்னைகள் குறித்து கிராம மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றார்.

    கருத்தரங்கில், அரூர் பேரூராட்சித் தலைவர் பி.காவேரி, மாவட்டத் திட்டக் குழு உறுப்பினர் எம்.ஜி.வி.பழனிமுருகன், பள்ளி உதவித் தலைமை ஆசிரியர் முருகன், மூத்த மருந்தாளுநர் சி.கோவிந்தராஜ், தீர்த்தமலை அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார விரிவாக்கக் கல்வியாளர் ஆர்.சின்னசாமி, சுகாதாரப் புள்ளியாளர் ஏ.அம்பேத்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai