Enable Javscript for better performance
ஆட்டோ தொழிலாளி மரணம்:சிபிசிஐடி விசாரணை கோரி ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    ஆட்டோ தொழிலாளி மரணம்:சிபிசிஐடி விசாரணை கோரி ஆர்ப்பாட்டம்

    By தருமபுரி,  |   Published on : 25th July 2014 03:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தருமபுரி மாவட்டம், தொப்பூரில் காவல் துறையினரின் விசாரணைக்குப் பிறகு உயிரிழந்த ஆட்டோ தொழிலாளியின் மரணம் குறித்து சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடக் கோரி, சிஐடியூ தொழில் சங்கம் சார்பில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியூ தொழில் சங்க மாவட்டத் தலைவர் பி.ஆறுமுகம் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் சி.நாகராஜன் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில், விசாரணை என்ற பெயரில் ஆட்டோ தொழிலாளியைத் துன்புறுத்திய காவல் துறை ஆய்வாளரை கைது செய்ய வேண்டும். போலீஸார் அச்சுறுத்தலால் காணாமல் போன மூன்று ஆட்டோ தொழிலாளிகளை கண்டுபிடித்து குடும்பத்தினருடன் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆட்டோ தொழிலாளியின் மரணம் குறித்து உண்மை அறிய, சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். உயிரிழந்த தொழிலாளியின் குடும்பத்திற்கு இழப்பீடாக ரூ.10 லட்சம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் தருமபுரி பகுதியைச் சேர்ந்த ஏராளமான ஆட்டோ ஓட்டுநர்கள் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai