ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை அளிப்பு
By அரூர், | Published on : 25th July 2014 03:59 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
அரூரில் பெருமானார் கல்வி அறக்கட்டளை சார்பில் ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, சீருடைகள் வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு அந்த அறக்கட்டளையின் நிறுவனர் தலைவர்
மு.கா.முகமதுஅலி தலைமை வகித்தார். தருமபுரி மாவட்ட திமுக பொறுப்பாளர் தடங்கம் பெ.சுப்பிரமணி மாணவர்களுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கிப் பேசியது:
முந்தைய திமுக ஆட்சியில் அமல்படுத்தப்பட்ட சமச்சீர்க் கல்வியால், ஏழை மாணவர்கள் 10, 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண்களை பெற்று வருகின்றனர்.
திமுக ஆட்சியில்தான் முஸ்லிம் சமுதாய மக்களுக்கு 3.5 சத இட ஒதுக்கீடு கிடைத்தது.திமுக ஆட்சியில்தான் சிறுபான்மையினர்
பாதுகாப்புடன் வாழ்ந்து வந்தனர்.
தங்கள் பகுதிகளில் வசிக்கும் ஏழை மாணவர்களின் கல்விக்கு, திமுக கட்சிப் பொறுப்பாளர்கள் உதவ வேண்டும் என்றார் அவர்.
விழாவில் சேலம் முஸ்லிம் கல்விச் சங்கத் தலைவர் எம்.நாசர்கான் (எ) அமான், திமுக நிர்வாகிகள் முல்லை ரவி, இளைஞரணி அமைப்பாளர் தீ.கோடீஸ்வரன், அப்துல்ரசீத், அப்துல் ரஹ்மான், செ.கிருஷ்ணகுமார், சி.கோவிந்தன், சென்னகிருஷ்ணன், சேட்டு, எம்.ஏ.ஆர்.பாபு,
உதயசூரியன், வெங்கடேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.