Enable Javscript for better performance
குடிநீர் கோரி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகை- Dinamani

சுடச்சுட

    

    குடிநீர் கோரி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகை

    By தருமபுரி,  |   Published on : 25th July 2014 03:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சீரான குடிநீர் விநியோகிக்கக் கோரி நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை ஈச்சம்பட்டி பொதுமக்கள் வியாழக்கிழமை முற்றுகையிட்டனர்.

    பாலஜங்கமனஅள்ளி ஊராட்சிக்குள்பட்டது ஈச்சம்பட்டி அருந்ததியர் காலனி. இந்தப் பகுதியில் சுமார் 50 குடும்பங்கள் உள்ளன.

    இந்தப் பகுதிக்கு கடந்த சில நாள்களாக முறையான தண்ணீர் விநியோகிக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், சுமார் 3 கி.மீ தொலைவு நடந்து சென்று ஆழ்துளைக் கிணற்றில் தண்ணீர் எடுத்து வருகின்றனராம். மேலும், ஒகேனக்கல் குடிநீரும் இதுவரை இந்தப் பகுதிக்கு வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

    இதனால், முறையான குடிநீர் வழங்கக் கோரி, ஈச்சம்பட்டி அருந்ததியர் காலனி மக்கள் 50-க்கும் மேற்பட்டோர் காலிக் குடங்களுடன் நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

    இதுதொடர்பாக வட்டார வளர்ச்சி அலுவலர் ரகு, போலீஸார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், குடிநீர் வழங்க விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளிக்கப்பட்டது. இதையடுத்து, பொதுமக்கள் முற்றுகைப் போராட்டத்தைக் கைவிட்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai