Enable Javscript for better performance
கைதானவர்களில் மூவருக்கு மருத்துவப் பரிசோதனை- Dinamani

சுடச்சுட

    

    கிருஷ்ணகிரி அருகே கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் கைதானவர்களில் 3 பேருக்கு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவமனையில் வியாழக்கிழமை மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது.

    கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி தனது காதலரான வேலம்பட்டியைச் சேர்ந்த சேரனுடன் கடந்த 16-ஆம் தேதி ராயக்கோட்டை அருகேயுள்ள போடம்பட்டியில் மலையடிவாரத்திலுள்ள மாந்தோப்பில் பேசிக் கொண்டிருந்தார்.

    அப்போது, அங்கு மது அருந்தி விட்டு வந்த சரக்கு வாகன ஓட்டுநர்களான ராயக்கோட்டை ரயில்வே காலனியை சேர்ந்த பிரகாஷ் (24), மணி (22), எச்சம்பட்டி சுப்பிரமணி (26), தருமபுரி மாவட்டம், ஜிட்டாண்டஅள்ளியைச் சேர்ந்த பிரகாஷ் (24) ஆகிய 4 பேரும், சேரனைத் தாக்கி மரத்தில் கட்டிப் போட்டு, அந்தக் கல்லூரி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தனர்.

    இதுகுறித்து ராயக்கோட்டை போலீஸார் வழக்குப் பதிந்து 4 பேரையும் கைது செய்து சேலம் சிறையில் அடைத்தனர்.

    அவர்களில் சுப்பிரமணி, மணி, பிரகாஷ் ஆகிய 3 பேரையும் மருத்துவப் பரிசோதனை செய்வதற்காக தருமபுரி மருத்துவக் கல்லூரிக்கு மருத்துவமனைக்கு போலீஸார் வியாழக்கிழமை அழைத்து வந்தனர். மருத்துவமனையில் 3 பேருக்கும் ஆண்மைப் பரிசோதனை நடத்தப்பட்டதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai