Enable Javscript for better performance
பேருந்து வசதி கோரி சாலை மறியல்- Dinamani

சுடச்சுட

    

    : தருமபுரி மாவட்டம், நல்லசேனஅள்ளி அருகே பேருந்து வசதி கோரி, பொதுமக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    நல்லசேனஅள்ளி ஊராட்சிக்குள்பட்ட கிராமம் முத்துக்கவுண்டன் கொட்டாய். இந்தக் கிராமத்திற்கு அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் தருமபுரியிலிருந்து நகரப் பேருந்து தடம் எண் 48-இல் சென்று வந்தது.

    இந்த நிலையில், முத்துக்கவுண்டன் கொட்டாய்க்குச் செல்லும் சாலை பழுதடைந்துள்ளதால், பேருந்து ஊருக்குள் செல்லாமல் நிறுத்தப்பட்டது. இதனால், அந்தக் கிராம மக்கள் சுமார் 3 கி.மீட்டர் தொலைவில் உள்ள நல்லசேனஅள்ளிக்கு வந்து, அங்கிருந்து தருமபுரி உள்ளிட்ட இடங்களுக்குச் சென்று வருகின்றனர்.

    இதனால், பள்ளி மாணவர்கள், தொழிலாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர்.

    இதனால், பழுதான சாலையை சீரமைத்து முத்துக்கவுண்டன் கொட்டாய்க்கு மீண்டும் பேருந்து இயக்க வேண்டும் என பொதுமக்கள் பலமுறை வலியுறுத்தியும், அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.

    இந்த நிலையில், வியாழக்கிழமை முத்துக்கவுண்டன் கொட்டாய் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து அங்கு சென்ற அதியமான்கோட்டை போலீஸார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இதில், சாலையைச் சீரமைத்து மீண்டும் பேருந்து இயக்க விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai