Enable Javscript for better performance
மக்கள்தொகை நாள் விழிப்புணர்வுப் பேரணி- Dinamani

சுடச்சுட

    

    உலக மக்கள் தொகை நாளையொட்டி தருமபுரியில் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

    தருமபுரி ஒளவையார் மகளிர் மேல்நிலைப் பள்ளி முன் இந்தப் பேரணியை மருத்துவப் பணிகள் இணை இயக்குநர் வெ.குணசுந்தரி கொடியசைத்து தொடக்கிவைத்தார்.

    பேரணியில், ஒளவையார் மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவிகள், ஸ்ரீ கிருஷ்ணா செவிலியர் கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் குறித்த வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வு பதாகைகளை ஏந்திச் சென்றனர். மேலும், துண்டுப்பிரசுரங்களை வழங்கினர்.

    இதைத்தொடர்ந்து, மக்கள் தொகை நாள் குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கு ரோட்டரி ஹாலில் நடைபெற்றது. இதில், மக்கள் தொகை நாள் குறித்து மாணவ, மாணவிகளுக்கு நடைபெற்ற பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டிகளில் பங்கேற்று வெற்றிப் பெற்றவர்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டன.

    இந்த நிகழ்ச்சியில், துணை இயக்குநர் (குடும்ப நலம்) எஸ்.தமிழரசன், தருமபுரி நகர்மன்றத் தலைவர் ஜெ.சுமதி ஆகியோர் பேசினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai