Enable Javscript for better performance
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 64 அடியாக உயர்வு- Dinamani

சுடச்சுட

    

    மேட்டூர் அணையின் நீர்மட்டம் 64 அடியாக உயர்வு

    Published on : 25th July 2014 03:38 AM  |   அ+அ அ-   |    |  

    மேட்டூர் அணையின் நீர்மட்டம் வியாழக்கிழமை 64 அடியாக உயர்ந்தது.

    ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரித்ததையடுத்து, அருவியின் மறுகரைக்கு பயணிகள் செல்வதைத் தடுக்கும் விதமாக தொங்கு பாலத்துக்கு பூட்டு போடப்பட்டது.

    கர்நாடகத்தில் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதியில் கடந்த 15 நாள்காக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், அங்குள்ள அணைகளில் இருந்து உபரிநீர் திறந்து விடப்படுகிறது.

    இதையடுத்து, கடந்த சில நாள்களாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.

    கடந்த 18-ஆம் தேதி 47.94 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் வியாழக்கிழமை 64.02 அடியாக உயர்ந்தது. கடந்த 6 நாள்களில் அணையின் நீர்மட்டம் 16.08 அடி உயர்ந்துள்ளது.

    வியாழக்கிழமை காலை அணைக்கு நொடிக்கு 28,961 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. குடிநீர்த் தேவைக்காக அணையிலிருந்து நொடிக்கு 800 கன அடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. நீர் இருப்பு 27.77 டி.எம்.சியாக இருந்தது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருவதால், ஆடிப் பெருக்கு பண்டிகையின் போது அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஒகேனக்கல்லில் 7-ஆவது நாளாக தடை: தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வியாழக்கிழமை நீர்வரத்து நொடிக்கு 32 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது.

    இதனால், காவிரியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. ஐந்தருவி, பிரதான அருவி, சினி அருவி, மினி அருவியில் புது வெள்ளம் சிவப்பு நிறத்தில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதையடுத்து, சுற்றுலாப் பயணிகள் அருவிகளில் குளிக்கவும், பரிசலில் பயணிக்கவும் விதிக்கப்பட்ட தடை 7-ஆவது நாளாக நீடிக்கிறது.

    அருவியின் மறுகரைக்கு பொதுமக்கள் செல்வதைத் தடுக்கும் வகையில் பிரதான அருவியின் அருகே உள்ள தொங்கு பாலத்துக்கு பூட்டு போடப்பட்டது. மேலும், அருவிக் கரையின் முக்கிய இடங்களில் போலீஸார், தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்புப் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். காவிரி கரையோரம் வசிக்கும் பொதுமக்களுக்கு தொடர்ந்து தண்டோரா, ஒலி பெருக்கி மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    kattana sevai
    flipboard facebook twitter whatsapp