Enable Javscript for better performance
வீடுகளில் கழிவறை கட்டித் தர நடவடிக்கை- Dinamani

சுடச்சுட

    

    தருமபுரி மாவட்டத்தில் நிர்மல் பாரத் அபியான் திட்டத்தின் கீழ் வீடுகளில் கழிவறை கட்டித் தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

    அனைத்து வீடுகளிலும் கழிவறை கட்டத் தேவையான நடவடிக்கை எடுப்பது தொடர்பான அனைத் துறை அலுவலர்களின் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

    கூட்டத்திற்கு தலைமை வகித்து மாவட்ட ஆட்சியர் கே.விவேகானந்தன் பேசியது:

    தருமபுரி மாவட்டத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையால் செயல்படுத்தப்படும் நிர்மல் பாரத் அபியான் திட்டத்தின் கீழ் அடிப்படை சுகாதாரக் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டது.

    இந்தக் கணக்கெடுப்பின்படி, தருமபுரி, நல்லம்பள்ளி, பென்னாகரம், பாலக்கோடு, காரிமங்கலம், மொரப்பூர், அரூர், பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய 8 ஊராட்சி ஒன்றியங்களில் 2,70,021 வீடுகள் உள்ளன.

    இதில், 83,285 வீடுகளில் மட்டும் கழிவறைகள் உள்ளன. 1,86,736 வீடுகளில் கழிவறை வசதி இல்லை.

    எனவே, அனைத்து வீடுகளிலும் கழிவறைகள் கட்டித் தர களப் பணியாளர்கள் மூலம் விண்ணப்பங்களைப் பெற்று அந்தந்த ஊராட்சி செயலர்களிடம் ஒப்படைக்க வேண்டும். இதற்கு பிறத் துறை அலுவலர்களும் உரிய ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும் என்றார் ஆட்சியர்.

    இந்தக் கூட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் ஸ்ரீதர், மகளிர் திட்ட அலுவலர் செந்தில்வேல், சுகாதாரப் பணிகள் இணை இயக்குநர் மருத்துவர் குணசுந்தரி, துணை இயக்குநர் மருத்துவர் சுரேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai