Enable Javscript for better performance
ஸ்டவ் அடுப்பு வெடித்ததில் தம்பதி சாவு- Dinamani

சுடச்சுட

    

    அரூர் அருகே மண்ணெண்ணெய் ஸ்டவ் அடுப்பு வெடித்ததில் தீக்காயம் அடைந்த தம்பதி உயிரிழந்தனர்.

    அரூர் அருகேயுள்ள எச்.கோபிநாதம்பட்டியைச் சேர்ந்தவர் சுரேஷ் (30). இவரது மனைவி பூங்கொடி (26). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

    இந்த நிலையில், பூங்கொடி மண்ணெண்ணெய் ஸ்டவ் அடுப்பில் செவ்வாய்க்கிழமை சமையல் செய்து கொண்டிருந்தாராம். அப்போது, ஸ்டவ் அடுப்பு வெடித்ததாகக் கூறப்படுகிறது. இதில், பூங்கொடி, அவரது கணவர் சுரேஷ் ஆகிய இருவரும் பலத்த காயமடைந்தனர்.

    இருவரும் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் பூங்கொடி புதன்கிழமையும், சுரேஷ் வியாழக்கிழமையும் உயிரிழந்தனர். இதுகுறித்து அரூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai