Enable Javscript for better performance
இளைஞர் தற்கொலை- Dinamani

சுடச்சுட

    

    தருமபுரி அருகே குடும்பப் பிரச்னை காரணமாக இளைஞர் வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

    அதியமான்கோட்டை அருகேயுள்ள முக்கல்நாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் முருகன். இவரது மகன் கார்த்திக் (24). எலக்ட்ரீசியனான இவர் 4 மாதங்களுக்கு முன் காதல் திருமணம் செய்துள்ளார்.

    இந்த நிலையில், குடும்பப் பிரச்னை காரணமாக மனமுடைந்து காணப்பட்ட அவர் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

    இந்தச் சம்பவம் குறித்து அதியமான்கோட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai