Enable Javscript for better performance
ஏ.பள்ளிப்பட்டியில் ஒகேனக்கல் குடிநீர் விநியோகிக்க வலியுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    ஏ.பள்ளிப்பட்டியில் ஒகேனக்கல் குடிநீர் விநியோகிக்க வலியுறுத்தல்

    By தருமபுரி  |   Published on : 26th July 2014 03:40 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பாப்பிரெட்டிபட்டி வட்டம், ஏ.பள்ளிப்பட்டியில் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் கிடைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தினர்.

    இதுகுறித்து ஏ.பள்ளிப்பட்டி ஊர்மக்கள் சார்பில் எஸ்.பொன்னுசாமி வெளியிட்ட அறிக்கை:

    தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவால் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம் கடந்தாண்டு மே 28ஆம் தேதி தொடங்கி வைக்கப்பட்டது.

    சேலம் - திருப்பத்தூர் சாலையை ஒட்டியுள்ள ஏ.பள்ளிப்பட்டியில் மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டி இருந்தும், இந்த வழியாகச் செல்லும் ஒகேனக்கல் குடிநீர்த் திட்ட பைப் லைன் இணைப்பு கொடுக்கப்படவில்லை. மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டியில் குடிநீர் ஏற்ற உந்துசக்தி இல்லாததே காரணமாகும்.

    அதோடு மட்டுமன்றி, ஊராட்சி கிணற்றில் இருந்து மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டிக்கு தண்ணீர் ஏற்றி விநியோகிக்கப்பட்டு வந்ததும் கடந்த மே 30ஆம் தேதி முதல் வரவில்லை. இதுகுறித்து மாவட்ட ஆட்சியரின் கவனத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டும் பயனில்லை.

    குடிநீரின்றி அவதிப்பட்டு வருவதைக் கருத்தில் கொண்டு விநியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai