Enable Javscript for better performance
சட்ட விழிப்புணர்வு முகாம்- Dinamani

சுடச்சுட

    

     பாலக்கோடு அருகே தண்டுகாரனஅள்ளியில் பெண் சிசுக் கொலைத் தடுப்புச் சட்டம் குறித்த விழிப்புணர்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

    பாலக்கோடு சட்டப் பணிகள் குழு சார்பில் நடைபெற்ற முகாமிற்கு, தருமபுரி மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி சு.வில்லியம் தலைமை வகித்தார். தலைமை குற்றவியல் நடுவர் பழனிசாமி, வட்டாட்சியர் லதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட கூடுதல் நீதிபதி (பயிற்சி) கார்த்திகேயன், மாவட்ட உரிமையியல் நீதிபதி கண்ணன், குற்றவியல் நடுவர்கள் கோபிநாத், ரத்தினவேல் பாண்டியன், பாலக்கோடு வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர் முருகேசன், செயலாளர் பெரியசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    மாவட்ட உரிமையியல் நீதிபதி, வட்ட சட்டப் பணிகள் குழுத் தலைவர் மோகன்ராஜ் வரவேற்றார். பாலக்கோடு குற்றவியல் நடுவர் ராமச்சந்திரன் நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai