Enable Javscript for better performance
தருமபுரியில் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் அமைக்க வலியுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    தருமபுரியில் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் அமைக்க வலியுறுத்தல்

    By தருமபுரி,  |   Published on : 26th July 2014 03:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தருமபுரியில் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் அமைக்க வேண்டும் என தமிழக விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியது.

    இதுகுறித்து அந்தச் சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.ஏ.சின்னசாமி வெள்ளிக்கிழமை தருமபுரி மாவட்ட ஆட்சியர் கே.விவேகானந்தனிடம் அளித்த மனு:

    தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய இரண்டு மாவட்டங்களுக்கு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் கிருஷ்ணகிரியில் செயல்பட்டு வருகிறது.

    தருமபுரி மாவட்டத்தில் சுமார் 250 பிரதம கூட்டுறவுச் சங்கங்கள் உள்ளன. இந்தச் சங்கங்கள் மூலம் நாள்தோறும் சுமார் 75,000 லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. இரண்டு ஒன்றியத்திலும் கொள்முதல் செய்யப்படும் அளவில், தருமபுரி மாவட்டத்தில் மட்டுமே கூடுதலாக பால் கொள்முதல் செய்யப்படுகிறது.

    தருமபுரி மாவட்டத்தில் ஏரியூர், பெரும்பாலை, நாகமரை, தொப்பூர், பொம்மிடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்த கொள்முதல் செய்யப்படும் பால் நீண்ட தொலைவில் உள்ள கிருஷ்ணகிரிக்கு கொண்டு செல்வதால் கால விரையம், கூடுதல் பொருள் செலவு ஏற்படுவதுடன், பாலின் தரம் குறைந்து இதர சத்துக்கள் குறைய வாய்ப்புள்ளது. இதனால், விவசாயிகள் மிகுந்த இழப்பைச் சந்திக்க வேண்டியுள்ளது.

    எனவே, தருமபுரி மாவட்டத்துக்கு தனி கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம், ஏற்கெனவே பால் குளிரூட்டும் நிலையத்தில் உள்ள இடத்தில் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai