Enable Javscript for better performance
தருமபுரியில் பாமக வெள்ளி விழா கொண்டாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    தருமபுரியில் பாட்டாளி மக்கள் கட்சியின் வெள்ளி விழா, பசுமை தாயகம் தின விழா உள்ளிட்ட முப்பெரும் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

    தருமபுரி மாவட்டம் முழுவதிலும் முப்பெரும் விழாவைக் கொண்டாட மக்களவை உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் உத்தரவிட்டிருந்தார். இதைத்தொடர்ந்து, தருமபுரி நகராட்சிக்குள்பட்ட 33 வார்டுப் பகுதிகளிலும் பாமக, வன்னியர் சங்கத்தினர் கட்சி கொடியேற்றி, மரக்கன்றுகளை நட்டனர்.

    தொடர்ந்து, கட்சியினர், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

    தருமபுரியை அடுத்த சோகத்தூரில் நடைபெற்ற விழாவில் முன்னாள் எம்பி இரா.செந்தில் கட்சிக் கொடியேற்றினார். கட்சியின் மாநில துணை பொதுச்செயலாளர் அ.சரவணன், மாவட்டச் செயலாளர் சாந்தமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    அதேபோல, மாவட்டம் முழுவதிலும் உள்ள கிராமங்களில் கட்சிக் கொடியேற்றி, மரக்கன்றுகள் நடப்பட்டதுடன், பள்ளி மாணவர்களுக்கு நோட்டு, புத்தகங்கள் வழங்கப்பட்டன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai