Enable Javscript for better performance
திராவகம் குடித்த பெண் மருத்துவமனையில் அனுமதி- Dinamani

சுடச்சுட

    

    தருமபுரி பேருந்து நிலையத்தில் குடிநீர் என நினைத்து திராவகத்தை குடித்த பெண் வியாபாரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    பழைய தருமபுரி அருகேயுள்ள சவுளூரைச் சேர்ந்தவர் வேடியப்பன். இவரது மனைவி பாப்பாத்தி(65). இவர் தருமபுரி நகரப் பேருந்து நிலையத்தில் பழ வியாபாரம் செய்து வருகிறார்.

    இந்த நிலையில், வெள்ளிக்கிழமை பாப்பாத்தி அருகில் பாட்டிலில் இருந்ததை தண்ணீர் என நினைத்துக் குடித்துவிட்டார். அது திராவகம் என தெரிய வந்ததை அடுத்து, பாட்டிலைக் கீழே போட்டார்.

    இதையடுத்து, சிறிதுநேரத்தில் ரத்த வாந்தி எடுத்த பாப்பாத்தியை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

    இந்தச் சம்பவம் பேருந்து நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai