Enable Javscript for better performance
59 பேருக்கு இளநிலை உதவியாளர் பணி நியமன ஆணை- Dinamani

சுடச்சுட

    

    தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட இளநிலை உதவியாளர் பணி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நடைபெற்ற கலந்தாய்வில் 59 பேருக்கு பணி நியமன ஆணைகள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

    குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்ற தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் பங்கேற்ற கலந்தாய்வு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், மாவட்டத்தில் இருந்து தேர்ச்சி பெற்ற 59 பேருக்கும் மாவட்டத்துக்குள் பள்ளி கல்வித் துறையில் பணியாற்ற ஆணைகள் வழங்கப்பட்டன.

    தருமபுரி மாவட்டத்தில் காலியாக எஞ்சியுள்ள 49 பதவிகள் வெளிமாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் மூலம் நிரப்பப்பட உள்ளதால், அவர்களுக்கான கலந்தாய்வு சனிக்கிழமை (ஜூலை 26) நடைபெறுகிறது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai