Enable Javscript for better performance
ஆக்க அறிவியல் விழிப்புணர்வு முகாம் நிறைவு விழா- Dinamani

சுடச்சுட

    

    ஆக்க அறிவியல் விழிப்புணர்வு முகாம் நிறைவு விழா

    By தருமபுரி  |   Published on : 27th July 2014 01:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம் சார்பில் ஆக்க அறிவியல் விழிப்புணர்வு முகாம் நிறைவு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

    தருமபுரி அரசு கலைக் கல்லூரி, வனத் துறை இணைந்து மூன்று நாள்கள் நடத்திய விழிப்புணர்வு முகாமின் முதல் நாளான வியாழக்கிழமை (ஜூலை 24) ஊரகப் பகுதியில் உள்ள அரசுப் பள்ளிகளில் பத்தாம் மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

    இரண்டாம் நாளான வெள்ளிக்கிழமை (ஜூலை 25) மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கும், சனிக்கிழமை (ஜூலை 26) விவசாயிகளுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டன.

    நிறைவு நாள் நிகழ்ச்சியில் அரசு கலைக் கல்லூரி முதல்வர் பி.கே.பாஸ்கரன், தாவரவியல் துறைத் தலைவர் ஜோதிபாய், ஒருங்கிணைப்பாளர் ஜி.பிரபாகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai