Enable Javscript for better performance
ஊர்தி ஓட்டுநர்கள் சங்க நிர்வாகி நீக்கம்- Dinamani

சுடச்சுட

    

    சங்க விதிகளுக்குப் புறம்பாகச் செயல்பட்டு வந்தவரை, அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கி தமிழ்நாடு அரசுத் துறை ஊர்தி ஓட்டுநர்கள் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியது.

    இதுதொடர்பாக அந்தச் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எல்.எம்.சரவணன் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

    தமிழ்நாடு அரசுத் துறை ஊர்தி ஓட்டுநர்கள் சங்க நிர்வாகிகள் கூட்டம் தருமபுரியில் சனிக்கிழமை நடைபெற்றது. கடந்தாண்டு நடைபெற்ற மாவட்டச் சங்கத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்த ராமஜெயம் தன்னை மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் எனக் கூறி சங்க விதிமுறைகளுக்கு மாறாகச் செயல்பட்டு வருகிறார்.

    எனவே, அவரின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவிப்பதோடு, அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்றார் அவர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai