Enable Javscript for better performance
கணவர் தூக்கிட்டுச் சாவு:மனைவியும் தற்கொலை- Dinamani

சுடச்சுட

    

    தருமபுரியை அடுத்துள்ள அதியமான்கோட்டை அருகே கணவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதால், மனமுடைந்த மனைவி வெள்ளிக்கிழமை இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

    அதியமான்கோட்டை அருகேயுள்ள முக்கல்நாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் முருகன். இவரது மகன் கார்த்திக் (24). எலக்ட்ரீஷியனான இவர் நான்கு மாதங்களுக்கு முன்பு மேல்ராஜா தோப்பு பகுதியைச் சேர்ந்த காந்திமதியை (20) காதல் திருமணம் செய்து கொண்டார்.குடும்ப பிரச்னை காரணமாக கார்த்திக் வீட்டில் வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து, குடும்பத்தினர் அனைவரும் கார்த்திக் சடலம் வைக்கப்பட்டிருந்த தருமபுரி அரசு மருத்துவமனைக்குச் சென்றிருந்தனர்.

    பெற்றோர் வீட்டில் தனியாக இருந்த காந்திமதி கணவர் இறந்த துக்கம் தாளாமல் வெள்ளிக்கிழமை இரவு வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

    சம்பவம் குறித்து அதியமான்கோட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai