Enable Javscript for better performance
தருமபுரியில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் அமைக்க வலியுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    தருமபுரியில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் அமைக்க வலியுறுத்தல்

    By தருமபுரி  |   Published on : 27th July 2014 01:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தருமபுரியில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வழக்குரைஞர்கள் சங்கம் வலியுறுத்தியது.

    இதுகுறித்து தருமபுரி வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர் கே.அப்புனு கவுண்டர், செயலாளர் எஸ்.கோவிந்தராஜு ஆகியோர் வெளியிட்ட கூட்டறிக்கை:

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து பிரித்து கடந்த 2008-ஆம் ஆண்டு தருமபுரி மாவட்ட நீதிமன்றங்கள் ஏற்படுத்தப்பட்டன. தற்போது மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம், கூடுதல் மாவட்ட நீதிமன்றம், குடும்ப நல நீதிமன்றம் உள்பட 17 நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகின்றன. மாவட்ட நுகர்வோர் தீர்ப்பாயம், இலவச சட்ட உதவி மையம் போன்ற நீதிமன்றங்கள் இன்னும் வரவேண்டியுள்ளது.

    இந்த நிலையில், தற்போது செயல்பட்டு வருவதில் 6 நீதிமன்றங்கள் தனியார் கட்டடத்தில் வெவ்வேறு பகுதிகளில் உள்ளன. மகளிர் நல நீதிமன்றம், மோட்டார் வாகன இழப்பீட்டு தீர்ப்பாயங்கள் சோகத்தூரில் அடிப்படை வசதிகள் ஏதுமின்றி இயங்குகிறது.

    இதுதவிர, நீதிபதிகளுக்கு குடியிருப்புகள் இல்லாததோடு, 4 நீதிபதி பணியிடங்கள் காலியாக உள்ளன. மேலும் வழக்குரைஞர்கள் சங்கத்துக்கென ஒதுக்கப்பட்டுள்ள கட்டடம் இடிந்து விழும் நிலையில் உள்ளது.

    கடந்த 6 ஆண்டுகளாக ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகக் கட்டடம் அமைக்க தீர்மானம் நிறைவேற்றியும் கட்டடம் கட்ட நிதி ஒதுக்கப்படவில்லை. இதனால், வழக்குரைஞர்கள் மட்டுமல்லாது பொதுமக்களும் கடும் பாதிப்புக்குள்ளாகி வருவதைக் கருத்தில் கொண்டு அனைத்து வசதிகளுடன் கூடிய ஒருங்கிணைந்த நீதிமன்றம் அமைக்க சென்னை உயர்நீதிமன்றமும், தமிழக அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai