Enable Javscript for better performance
பெண் குழந்தை கொலை: தந்தை கைது- Dinamani

சுடச்சுட

    

    அரூர் அருகே பெண் குழந்தை கொலை வழக்குத் தொடர்பாக அவரது தந்தையை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.

    அரூர் வட்டம், சுண்டக்காப்பட்டியைச் சேர்ந்தவர் தொழிலாளி குமார் (35). இவரது மனைவி மனோன்மணி. கடந்த 2011-இல் இவர்களுக்கு 4-ஆவதாக பிறந்த பெண் குழந்தையை 3 மாதங்களில் விஷம் கொடுத்து கொலை செய்தாராம்.

    இந்த நிலையில், மனோன்மணி கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஸ்டவ் வெடித்ததில் உயிரிழந்தார். பெண் குழந்தை கொலைச் சம்பவத்தில் குழந்தையின் பிரேத பரிசோதனை தொடர்பாக அரசு மருத்துவரின் அறிக்கை கிடைக்காமல் இருந்தது. தற்போது அதை போலீஸார் பெற்றனர்.

    மருத்துவ அறிக்கையில் பெண் குழந்தையை விஷம் வைத்து அவரது பெற்றோர் கொலை செய்திருப்பது தெரிய வந்ததையடுத்து, குமாரை மொரப்பூர் போலீஸார் கைது செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai