Enable Javscript for better performance
மண் சரிந்து தொழிலாளி சாவு- Dinamani

சுடச்சுட

    

    தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே கிணறு தோண்டிய போது மண் சரிந்து விழுந்ததில் தொழிலாளி உயிரிழந்தார்.

    காரிமங்கலம் அருகே மொய்தீன்சாய்பு கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்தவர் இனாயத்துல்லா(52). இவருக்குச் சொந்தமான தோட்டத்தில் கிணறு தோண்டும் பணியில் தொழிலாளர்கள் வெள்ளிக்கிழமை ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென மண் சரிந்து அத்தனூர் ஆத்துமேடு பகுதியைச் சேர்ந்த தொழிலாளி சவுந்தரம்(36) மீது விழுந்தது. மண்ணில் புதைந்த அவரை உடனடியாக பொக்லைன் இயந்திரம் மூலம் மீட்டனர். அதற்குள் அவர் மூச்சுத் திணறி இறந்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai