Enable Javscript for better performance
மாவட்ட ஆலோசகர் பணியிடம் ஆக.10-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்- Dinamani

சுடச்சுட

    

    மாவட்ட ஆலோசகர் பணியிடம் ஆக.10-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

    By தருமபுரி,  |   Published on : 27th July 2014 01:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தருமபுரி மாவட்டத்தில் தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டத்தை சிறப்பாகச் செயல்படுத்திட ஏதுவாக தாற்காலிக அடிப்படையில் நியமிக்கப்படவுள்ள பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் ஆகஸ்ட் மாதம் 10-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    இதுகுறித்து மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கை:

    விவசாயத்தை மேம்படுத்துவதோடு, விவசாயிகளின் வருமானத்தைப் பெருக்கும் நோக்கில் செயல்படுத்தப்பட்டு வரும் தேசிய உணவுப் பாதுகாப்பு இயக்க திட்டத்தைச் சிறப்பாக நிறைவேற்ற ஏதுவாக மாவட்ட ஆலோசகர், தொழில்நுட்ப ஆலோசகர் பணியிடங்களுக்கு தலா ஒருவர் தாற்காலிக அடிப்படையில் நியமனம் செய்யப்பட உள்ளது.

    மாவட்ட ஆலோசகர் பணியிடத்துக்கு வேளாண்மையில் இளம் அறிவியல் மற்றும் உழவியல், வேளாண் விரிவாக்கம், மண்ணியல், பயிர்ப்பாதுகாப்பு, பயிர் மேம்பாடு பிரிவுகளில் மூதறிவியல் பட்டத்துடன் பயிர் உற்பத்தி, விரிவாக்கத்தில் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

    தொழில்நுட்ப ஆலோசகர் பணியிடத்துக்கு வேளாண்மை இளம் அறிவியல் பட்டத்துடன் கணினி இயக்குவதில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். வேளாண்மையில் பட்டம் பெற்றவர் இல்லாத பட்சத்தில் உயிரியல் பாடத்தில் இளம் அறிவியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

    தகுதியானவர்கள் நேரிலோ அல்லது தபால் மூலமாக விண்ணப்பத்தை ஆகஸ்ட் மாதம் 10-ஆம் தேதிக்குள் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் உள்ள வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai