Enable Javscript for better performance
விழிப்புணர்வு சைக்கிள் பேரணி குழுவுக்கு வரவேற்பு- Dinamani

சுடச்சுட

    

    விழிப்புணர்வு சைக்கிள் பேரணி குழுவுக்கு வரவேற்பு

    By தருமபுரி,  |   Published on : 27th July 2014 01:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தமிழகத்தில் குற்ற நடவடிக்கையைத் தடுத்தல் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பைச் சேர்ந்த தன்னார்வலர்களின் சைக்கிள் பேரணி தருமபுரியை சனிக்கிழமை வந்தடைந்தது.

    குற்றங்களைத் தடுப்பதோடு, குற்ற நிகழ்வுகள் தொடர்பாக காவல் துறைக்கு உதவி புரியும் வகையில் தன்னார்வலர்களைக் கொண்டு பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் ஏற்படுத்தப்பட்டது. இந்த அமைப்பின் மூலம் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் ராமேசுவரத்தில் இருந்து சென்னைக்கு சைக்கிள் பேரணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    52 பேர் இடம்பெற்றுள்ள இந்தக் குழு தருமபுரி மாவட்டம், தொப்பூரை சனிக்கிழமை வந்தடைந்தது. அவர்களை, மாவட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் கல்யாண் வரவேற்றார். தொடர்ந்து அங்கிருந்து புறப்பட்ட குழு தருமபுரியை வந்தடைந்தது.

    இந்தக் குழு ஞாயிற்றுக்கிழமை கிருஷ்ணகிரிக்கு புறப்பட்டுச் செல்கிறது. இன்னும் 4 நாள்களில் இவர்கள் சென்னையை சென்றடைவார்கள் என தெரிவிக்கப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai