Enable Javscript for better performance
ஒகேனக்கல் அருவியில் விழுந்த முதியவர் உயிருடன் மீட்பு- Dinamani

சுடச்சுட

    

    ஒகேனக்கல் அருவியில் விழுந்த முதியவர் உயிருடன் மீட்பு

    By தருமபுரி,  |   Published on : 28th July 2014 03:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் அருவியில் ஞாயிற்றுக்கிழமை விழுந்த முதியவர் உயிருடன் மீட்கப்பட்டார்.

    வேலூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே தும்பேரி கிராமத்தைச் சேர்ந்தவர் முனியகண்ணு(82).

    இவர், ஒகேனக்கல் அருவிக்கு தனியாக வந்தார். அப்போது, தன்னை உள்ளூர்வாசி என போலீஸாரிடம் கூறி, அருவியில் உள்ள சிறுவர் பூங்காவிற்கு சென்றாராம். பின்னர், அங்குள்ள அருவிக்குச் சென்று குளிக்க முயன்றபோது, தண்ணீரில் விழுந்து அடித்துச் செல்லப்பட்டார்.

    இதுகுறித்து, தகவல் அறிந்த உதவி மாவட்ட தீயணைப்பு அலுவலர் கார்த்திகேயன் தலைமையில், ஒகேனக்கல் தீயணைப்பு நிலைய அலுவலர் ஜானகிராமன் மற்றும் தீயணைப்பு வீரர்கள், பரிசல் ஓட்டிகளின் துணையுடன் முதியவரை உயிருடன் மீட்டனர். பின்னர், அவர் அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்டார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai