Enable Javscript for better performance
மோசடி வழக்கு: இருவர் கைது- Dinamani

சுடச்சுட

    

    தருமபுரியில் தனியார் நிறுவத்தில் பொருள்களை வாங்கி பணத்தை செலுத்தாமல் மோசடி செய்ததாக இரண்டு பேரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.

    கோவையிலுள்ள ஒரு தனியார் நிறுனத்தின் பொது மேலாளர் மனோகரன் என்பவர், தங்களது நிறுவனத்தில் இருந்து எல்க்ட்ரானிக்ஸ் பொருள்களை, திருச்சியைச் சேர்ந்த சரவணன்(31), சிவக்குமார்(33) ஆகிய இருவரும் ரூ.2 கோடியே 74 லட்சத்து வாங்கி அந்த பணத்தை செலுத்தாமல் மோசடி செய்துள்ளதாகவும், அவர்களிடம் இருந்து பணத்தை மீட்டு தருமாறு அண்மையில் தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தார்.

    இது குறித்து மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்தனர்.

    இந்த விசாரணையில், சரவணன், சிவக்குமார் இருவரும் தனியார் நிறுவனத்திற்கு பணத்தை தராமல் மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai