Enable Javscript for better performance
1510 மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் அளிப்பு- Dinamani

சுடச்சுட

    

    1510 மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் அளிப்பு

    By தருமபுரி  |   Published on : 28th July 2014 02:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தருமபுரி மாவட்டம், அதியமான்கோட்டையில் 1510 மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.

    அதியமான்கோட்டை அரசு ஆண்கள் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவ

    ஆட்சியர் கே.விவேகானந்தன் தலைமை வகித்தார்.

    இந்த நிகழ்ச்சியில், மாநில உயர்கல்வித்துறை அமைச்சர் பி.பழனியப்பன் பங்கேற்று மாணவர்களுக்கு மிதிவண்டிகள் வழங்கி பேசியது: இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவில் தமிழகத்தில் பள்ளக் கல்வித்துறைக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

    பள்ளி மாணவர்களுக்கு 14 வகையான விலையில்லா திட்டங்களை தமிழக முதல்வர் அறிவித்து செயல்படுத்து வருகிறார்.

    தருமபுரி மாவட்டத்தில் மொத்தம் 93 மேல்நிலைப்பள்ளிகள் உள்ளது. இந்தப் பள்ளிகளைச் சேர்ந்த 45 ஆயிரத்து 600 மாணவ, மாணவிகளுக்கு ரூ.13 கோடியே 98 லட்சம் மதிப்பில் இலவச மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளது.

    தருமபுரி மாவட்டம் என்றாலே கல்வியில் பின் தங்கிய மாவட்டம் என்ற நிலை தற்போது மாறியுள்ளது.

    கடந்த 2011-12-ஆம் கல்வியாண்டில் பிளஸ் 2 தேர்ச்சி விகிதம் மாநில அளவில் 27-ஆவது இடத்தில் தருமபுரி மாவட்டம் இருந்தது. 2012-13-ஆம் கல்வியாண்டில் 21-ஆவது இடமும், 2013-14-ஆம் கல்வியாண்டில் 12-ஆவது இடமும் பெற்று சாதனை படைத்துள்ளது.

    இதேபோல, 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு தேர்ச்சியில் 2011-12-ஆம் கல்வியாண்டில் மாநிலத்தில் கடைசி இடத்தில் இருந்த நமது மாவட்டம், கடந்த கல்வியாண்டில் 19-ஆவது இடத்தை படித்து சாதனை படைத்துள்ளது. மேலும், தமிழக அரசு உயர் கல்வி வளர்ச்சிக்கு தருமபுரியில் அரசு பொறியியல் கல்லூரி, காரிமங்கலத்தில் பெண்கள் கலைக்கல்லூரி, பாப்பிரெட்டிப்பட்டி, அரூரில் அரசு கலைக்கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளது. இது தவிர, தருமபுரியில் சமுதாய உறுப்புக் கல்லூரி தொடங்கப்பட்டுள்ளது.

    மேலும், தருமபுரியில் வேலை வாய்ப்பை உருவாக்க வகையில் 1733 ஏக்கரில் சிப்காட் தொழில்பேட்டை அமைப்பதற்கான ஏற்பாடுகள் தற்போது நடைபெற்று வருகின்றன. பள்ளி மாணவ, மாணவிகள் தமிழக அரசின் திட்டங்களை நல்ல முறையில் பயன்படுத்தி, ஆசிரியர்களின் அறிவுரையேற்று உயர் கல்வியில் சாதிக்க வேண்டும் என்றார் அமைச்சர்.

    இந்த விழாவில், மாவட்ட வருவாய் அலுவலர் ப.ராமர், பாலக்கோடு தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் கே.பி.அன்பழகன், நல்லம்பள்ளி ஒன்றியக்குழுத் தலைவர் பூக்கடை எம். முனுசாமி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கே.பி.மகேஸ்வரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai