Enable Javscript for better performance
அனைத்துத் தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற களப் பணியாற்ற வேண்டும்- Dinamani

சுடச்சுட

    

    அனைத்துத் தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற களப் பணியாற்ற வேண்டும்

    By அரூர்,  |   Published on : 29th July 2014 03:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    2016 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி பெறுவதற்காகக் கட்சித் தொண்டர்கள் தீவிரக் களப் பணியில் ஈடுபட வேண்டும் என, உயர்கல்வித் துறை அமைச்சர் பி.பழனியப்பன் தெரிவித்தார்.

    பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், கவுண்டம்பட்டியில் தருமபுரி மாவட்ட ஜெயலலிதா பேரவை சார்பில் 100 வார திண்ணை பிரசார தொடக்க விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு பேரவையின் மாவட்டச் செயலரும், ஒன்றியக் குழுத் தலைவருமான சி.தென்னரசு தலைமை வகித்தார்.

    பிரசார கூட்டத்தில் அமைச்சர் பி.பழனியப்பன் பேசியது:

    தமிழக முதல்வர் அறிவித்துச் செயல்படுத்துகின்ற அரசு நலத் திட்டங்களை இந்தியாவின் பிற மாநிலங்கள் பின்பற்றி வருகின்றன. அதிமுக நிறுவனர் எம்.ஜி.ஆர். கொண்டு வந்த சத்துணவுத் திட்டம் உலகத்தில் எந்த நாட்டிலும் இல்லை. தமிழகத்தில் 3 ஆண்டுகால நல்லாட்சியின் காரணமாக கடந்த மக்களவைத் தேர்தலில் அதிமுக 37 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

    தருமபுரியில் அரசுப் பொறியியல் கல்லூரி, காரிமங்கலத்தில் மகளிர் கலைக் கல்லூரி, அரூர், பாப்பிரெட்டிப்பட்டியில் பெரியார் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள் என தொடங்கப்பட்டுள்ளன.

    அதிமுக ஆட்சியில் தருமபுரி மாவட்டம் பல்வேறு வளர்ச்சிகளைப் பெற்றுள்ளது.

    வரும் 2016 சட்டப் பேரவைத் தேர்தலில் அதிமுக அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும். அதற்காக கட்சித் தொண்டர்கள் தீவிர களப் பணியாற்ற வேண்டும் என்றார் அவர்.

    இந்த பிரசார கூட்டத்தில் அதிமுக மாவட்டச் செயலர் பூக்கடை முனுசாமி, எம்எல்ஏ கே.பி.அன்பழகன், சுப்பிரமணிய சிவா கூட்டுறவுச் சர்க்கரை ஆலையின் தலைவர் வளர்மதி முருகேசன், முன்னாள் எம்எல்ஏ கே.சிங்காரம், ஊராட்சித் தலைவர் வி.இளமாறன், ஒன்றியச் செயலர்கள் ஆர்.ஆர்.முருகன், என்.ராஜேந்திரன், ஒன்றியக் குழுத் தலைவர் பி.கே.முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai