Enable Javscript for better performance
ஊக்கத் தொகையை உயர்த்தக் கோரி பயிற்சி மருத்துவர்கள் வேலைநிறுத்தம்- Dinamani

சுடச்சுட

    

    ஊக்கத் தொகையை உயர்த்தக் கோரி பயிற்சி மருத்துவர்கள் வேலைநிறுத்தம்

    By தருமபுரி,  |   Published on : 29th July 2014 03:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஊக்கத்தொகையை உயர்த்தி வழங்கக் கோரி தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் பயிற்சி மருத்துவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

    மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் இளநிலை பயிற்சி மருத்துவர்கள் ரூ.8,200, முதுநிலை பயிற்சி மருத்துவர்களுக்கு ரூ.17,400 ஊக்கத் தொகையாக வழங்கப்படுகிறது.

    இந்த ஊக்கத் தொகையை, இளநிலை பயிற்சி மருத்துவர்களுக்கு ரூ.20 ஆயிரம், முதுநிலை பயிற்சி மருத்துவர்களுக்கு ரூ.45 ஆயிரம் என உயர்த்தி வழங்க வேண்டும் எனக் கோரி பயிற்சி மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தருமபுரியில் நடைபெற்ற காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் பணிபுரியும் 84 பயிற்சி மருத்துவர்கள் பங்கேற்றனர்.

    முன்னதாக, இவர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி பதாகைகளுடன் மருத்துவக் கல்லூரி உள்நோயாளிகள் மருத்துவமனை கட்டடத்தின் நுழைவு வாயிலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai