Enable Javscript for better performance
பதவி உயர்வு வழங்க வலியுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    பதவி உயர்வு அளித்து, ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என வலியுறுத்தி ஓய்வுபெற்ற காவலர்கள் தருமபுரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஆஸ்ரா கர்கிடம் திங்கள்கிழமை மனு அளித்தனர்.

    ஓய்வுபெற்ற காவலர்கள் நலச் சங்கத் தலைவர் எம்.ராமசாமி தலைமையில் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன் உள்ள தேசிய நெடுஞ்சாலையிலிருந்து பேரணியாகச் சென்று மனு அளித்தனர்.

    மதுரை உயர்நீதி மன்றக் கிளை அளித்த உத்தரவின்படி, நிலை 1, நிலை 2, தலைமைக் காவலர்களுக்குப் பணிக்காலத்தில் வழங்க வேண்டிய பதவி உயர்வு வழங்கி, ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என மனுவில் வலியுறுத்தினர்.

    இதில், சங்கச் செயலாளர் எம்.அர்த்தநாரி, பொருளாளர் ஜி.திருமலை உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai