Enable Javscript for better performance
பரிசல் ஓட்டிகளுக்கு எஸ்.பி. பாராட்டு- Dinamani

சுடச்சுட

    

    ஒகேனக்கல் காவிரி ஆற்றில் விழுந்தவரை மீட்ட பரிசல் ஓட்டிககளை தருமபுரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஆஸ்ரா கர்க் திங்கள்கிழமை பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.

    ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, அருவிகளில் தண்ணீர் அதிகளவில் கொட்டுகிறது. எனவே, பாதுகாப்பு கருதி சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று, பரிசல் ஓட்டவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில், வேலூர் மாவட்டம், வாணியம்பாடி அருகேயுள்ள தும்பேரியைச் சேர்ந்த முதியவர் முனிகண்ணன் (82) ஞாயிற்றுக்கிழமை ஒகேனக்கல் வந்தார். தன்னை உள்ளூர்வாசி எனக் கூறிவிட்டு, அருவிக்குச் சென்றார்.

    சிறுவர் பூங்கா அருகே உள்ள அருவிப் பகுதியில் முனிகண்ணன் தவறி விழுந்து ஆற்றில் சுமார் 200 அடி தொலைவு அடித்துச் செல்லப்பட்டார்.

    தகவலறிந்த ஊட்டமலை கிராமத்தைச் சேர்ந்த பரிசல் ஓட்டிகளான பாலு (33), ரங்கசாமி (50) ஆகியோர் ஆபத்தை பொருள்படுத்தாமல் ஆற்றில் பரிசல் மூலம் சென்று முதியவர் முனிகண்ணனை மீட்டனர்.

    இவர்கள் இருவரையும் தருமபுரி மாவட்ட எஸ்.பி. ஆஸ்ராகர்க் பாராட்டி திங்கள்கிழமை வெகுமதி அளித்தார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai