பாமக கொடியேற்று விழா
By அரூர், | Published on : 29th July 2014 03:46 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
அரூரை அடுத்த நாச்சினாம்பட்டியில் பாட்டாளி மக்கள் கட்சியின் கொடியேற்று விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
பசுமைத் தாயகம் தினம், பாமக 25-ம் ஆண்டு விழாவையொட்டி அரூர் தெற்கு ஒன்றியம் சார்பில், நாச்சினாம்பட்டியில் கொடியேற்று விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கட்சியின் மூத்த நிர்வாகி கே.கோவிந்தராஜ் தலைமை வகித்தார்.
பாமக மாநில துணைத் தலைவர், தருமபுரி முன்னாள் எம்எல்ஏ இல.வேலுசாமி கட்சியின் கொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். நாச்சினாம்பட்டி அரசு நடுநிலைப் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு எழுதுபொருள்கள் மற்றும் நோட்டுகளையும் அவர் வழங்கினார். பசுமைத் தாயகம் சார்பில் நாச்சினாம்பட்டியில் உள்ள பொது இடங்களில் 50-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன.
விழாவில், நகரச் செயலர் கே.ஐயப்பன், மூத்த நிர்வாகிகள் அன்னை முருகேசன், இரா.திருவேங்கடம், பி.தண்டபாணி, ராஜேந்திரன், தீர்த்தகிரி, ஆதிமூலம் உள்
ளிட்டோர் கலந்துகொண்டனர்.