Enable Javscript for better performance
மாணவர் சங்கச் செயலரை தாக்கியபோலீஸார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    மாணவர் சங்கச் செயலரை தாக்கியபோலீஸார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

    By தருமபுரி,  |   Published on : 29th July 2014 03:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தருமபுரி மாவட்ட மாணவர் சங்கச் செயலரை தாக்கிய போலீஸார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இந்திய மாணவர் சங்கம் வலியுறுத்தியது.

    இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்ட ஸ்தாபன பயிற்சி முகாம் ஜூலை 26, 27-இல் தருமபுரி முத்து இல்லத்தில் நடைபெற்றது.

    அகில இந்திய வழக்குரைஞர்கள் சங்க மாவட்ட நிர்வாகி மாதையன் முகாமை தொடக்கி வைத்தார். மாநில துணைத் தலைவர் கண்ணன், முன்னாள் மாவட்டத் தலைவர் மாரிமுத்து, அறிவியல் இயக்க மாநில செயற்குழு உறுப்பினர் சேதுராமன், மாவட்டச் செயலாளர் கோவிந்தசாமி ஆகியோர் பல்வேறு தலைப்புகளில் பேசினர்.

    தருமபுரி அரசு கலைக்கல்லூரியில் காலியாக உள்ள 80 பேராசிரியர்கள் பணியிடங்களை நிரப்ப வேண்டும். அரூர், பாப்பிரெட்டிப்பட்டி பெரியார் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளை அரசுக் கல்லூரிகளாக மாற்ற வேண்டும். அதேபோல, பாப்பிரெட்டிப்பட்டி, அரூர், பாப்பாரப்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள கல்லூரிகளுக்குச் சொந்தக் கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். தனியார் பள்ளி, கல்லூரிகளில் கட்டணக் கொள்ளையைத் தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai