Enable Javscript for better performance
அதியமான்கோட்டை  காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம்- Dinamani

சுடச்சுட

    

    அதியமான்கோட்டை  காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம்

    By  தருமபுரி,  |   Published on : 30th July 2014 09:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வியாபாரிகளிடம் மோதல் போக்கை கடைப்பிடித்தது உள்ளிட்ட புகார்கள் தொடர்பாக அதியமான்கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் ரஞ்சித் செவ்வாய்க்கிழமை தாற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
     தருமபுரி அருகேயுள்ள அதியமான்கோட்டை காவல் நிலைய ஆய்வாளராகப் பணியாற்றி வந்தவர் ரஞ்சித். புகார் தொடர்பாக காவல் நிலையத்துக்கு வரும் பொதுமக்களிடம் தரக்குறைவாக பேசுவாராம். இதையடுத்து, அவரது
     போக்கைக் கண்டித்து, அண்மையில் அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்களால் கண்டன சுவரொட்டி நகர் முழுவதிலும் ஒட்டப்பட்டன.
     இந்த நிலையில், கடந்த
     19-ஆம் தேதி காலபைரவர் சுவாமி கோயிலில் நடைபெற்ற தேய்பிறை அஷ்டமி வழிபாட்டின் போது வியாபாரிகளுடன் தகராறில் ஈடுபட்டது உள்பட பல்வேறு புகார்கள் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு சென்றன.
     இதையடுத்து, ஆய்வாளர் ரஞ்சித் மீது துறைரீதியிலான நடவடிக்கை எடுக்குமாறு மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஆஸ்ரா கர்க் அளித்த பரிந்துரையை ஏற்று, ஆய்வாளர் ரஞ்சித்தை தாற்காலிக பணியிடை நீக்கம் செய்து சேலம் சரக டி.ஐ.ஜி. அமல்ராஜ் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai