Enable Javscript for better performance
இலவசக் கண் சிகிச்சை முகாம்- Dinamani

சுடச்சுட

    

    பாலக்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இலவசக் கண்சிகிச்சை முகாம் அண்மையில் நடைபெற்றது.
     பாலக்கோடு அரிமா சங்கம், மாவட்டப் பார்வை இழப்பு தடுப்புச் சங்கம், அரவிந்த் கண் மருத்துவமனை ஆகியவை இணைந்து நடத்திய முகாமை பேரூராட்சித் தலைவர் மகேந்திரன், ஸ்ரீ முகாம்பிகை பாலிடெக்னிக் கல்லூரிச் செயலாளர் மதன்மோகன் ஆகியோர் தொடக்கிவைத்தனர்.
     500-க்கும் அதிகமானவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை அளிக்கப்பட்டதுடன், 272 பேர் இலவசக் கண் அறுவைச் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர். பாலக்கோடு அரிமா சங்கச் செயலாளர் கோவிந்தசாமி, பொருளாளர் சாம்ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai